என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 17 செப்டம்பர், 2012

பிறக்கும் போது
மலர்களுடன் வாசமும்
வருவது போல ..!
ஒவொரு மாநிடபிறப்பின்
அத்தியாயத்திலும்
நட்பின் பிறப்பும் கருக்கொள்ள
...
தவறுவதில்லை .!

தாஸ்

உன்னை காணாமல் ..!

நிலவின் பிரிவால்
கண்ணீரை சுமக்கும்
மேகங்களாய் நான்
இங்கே ..!
உன்னை காணாமல் ..!

தாஸ்

இதயம்

உண்மையாக நேசித்த
ஒருவரின் மௌனம்
உனக்காக இருந்தாலும்
இதயம் வலிகளை சுமக்க
தவறுவதில்லை !

தாஸ்

உன் நினைவுகள் ..!

நீ பிரிந்து போன
பின்பும் ...
பிரியாமல் இருக்கிறது
உன் நினைவுகள் ..!
அதுவே எனக்கு
...
சுகமானது தான்!

தாஸ்

வியாழன், 13 செப்டம்பர், 2012

கல்லறை

தினமும் ஒரு
முத்தம் எனக்கு.!
தினமும் ஒரு வார்த்தை
என் பெயர் .
அருகில் இருப்பாள்
இருந்து மலர் வைத்து
அழகு பார்ப்பாள் என்னை.
இத்தனையும் என் கல்லறைக்கே ..!
Thas
நீ என் குழந்தை

வலிகள் எத்தனை
நீ தந்தாலும் ..!
பிரிவுகள் விரும்பாது
உன்னுடன் இருக்கிறேனே ..!
காதலி நீ என்
குழந்தையாய் இருப்பதாலடி ..'
Thas
விலக முடியவில்லை,,,!!

நான் எப்படி உன்னை
விட்டு விலக
முடியவில்லையோ ..!
அப்படியே நீயும்
நினைத்தால் ..
அப்போதே நீயும்
கடவுளாவாய் எனக்கு !
Thas
அழுது கொண்டிருக்கிறேன்


 அதிகமாக உன்னை
நேசித்தேன் ..!
அதனால் அதிகமாக
அழுது கொண்டிருக்கிறேன்
உன்னை பிரிந்ததால் ..!
Thas

நம்பிக்கை

காதலித்தாய்
காத்திருக்கிறேன்
பேசிக்கொண்டே
கண்ணீருடன் ஒரு
வார்த்தை நீ பேசுவாய்
என்ற நம்பிக்கையில்
உன் கல்லறையில் ..
Thas

உன்னை நேசித்த போது,,,!!

உன்னை நேசித்த போது
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!
Thas
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!

Thas

இதயத்தில் இருக்க அனுமதி தா,,,,!!!

உன்னிடம் அன்பு
இருக்கு ..
அதை சுமக்கும்
இதயம் இருக்கு ..!
இருக்கும் இதயத்தில்
இருக்க அனுமதி தா ..!
ஆயுள் வரை என்னுயிர் தந்து
உனக்காய் வாழ்வதுக்கு..!

Thas

நிலவு

நிலவு வருவது மாலை
உறங்கும் உன்னை தாலாட்ட ..!
நட்சத்திரம் மண்ணில் வருவது
உன் புன்னகை பார்க்க ..!
நான் உன்னை பார்ப்பது
என்னை வாழவைக்க ..!

உன்னுடன் ..!

நான் நட்புடன்
வந்தேன் ..!
விழி துடைத்து
என் விழியானாய்.
வலி வருமா எனக்கினி
வாழும் வரை உன்னுடன் ..!
Thas

அழகி

உன்னை பார்த்ததும்
என் உதடுகள்
சிரித்தது .
ஆனால் மலர்கள் அழுதது
தம்மை விட அழகி
இவள் யார் என்று..!

Thas

தொலைந்தேன் ,,..!!!!!

முதல் முதல்
உன்னை பார்த்தேன் ..!
பார்த்தவுடன் என்னை
தொலைத்தேன் ..!
தேடிய போது தான்
தெரிந்தது நான் தொலைந்தது
உன்னில் என்று ..


 

பொய்யாகக்கூடாது,,,!!

ஒருநாளும் பொய்யாகக்கூடாது
உன் அன்பு
பொய்யானால் மெய்யாக
துடிக்க கூடாது
என் இதயம் ..!

ரசிகனாய்...!!!!!!!

என் வீட்டு முற்றத்து ரோஜாக்கள்
உன் முகத்தின் முகவரியாய்..!
சில்லென சிறுகாற்றில்
சட்டென அசையும் போது
உன் உதடுகளின் சிரிப்பு .!
அதனால் நான் ஆனேன் ரசிகனாய்
என் வீட்டு ரோஜாசெடிக்கு ..!

Thas

தவறுகள்

உன் உதடுகளின்
புன்னகைக்காக நீ
எனக்காக செய்யும்
தவறுகள் .
மரணத்தை விட வலியானது!
உன்னை நேசிப்பதால்
ஆழமாய் !

தாஸ்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நான் போகும் பாதையில்
ஆயிரம் முட்கள்
இருப்பதை அறிந்தும்
பயணித்துக்கொண்டுதான்
இருக்கிறேன் ..
ரோயா உன்னை அடைவதுக்காய்.

தாஸ்