என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 13 செப்டம்பர், 2012

உன்னை நேசித்த போது,,,!!

உன்னை நேசித்த போது
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!
Thas
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!

Thas

இதயத்தில் இருக்க அனுமதி தா,,,,!!!

உன்னிடம் அன்பு
இருக்கு ..
அதை சுமக்கும்
இதயம் இருக்கு ..!
இருக்கும் இதயத்தில்
இருக்க அனுமதி தா ..!
ஆயுள் வரை என்னுயிர் தந்து
உனக்காய் வாழ்வதுக்கு..!

Thas

நிலவு

நிலவு வருவது மாலை
உறங்கும் உன்னை தாலாட்ட ..!
நட்சத்திரம் மண்ணில் வருவது
உன் புன்னகை பார்க்க ..!
நான் உன்னை பார்ப்பது
என்னை வாழவைக்க ..!

உன்னுடன் ..!

நான் நட்புடன்
வந்தேன் ..!
விழி துடைத்து
என் விழியானாய்.
வலி வருமா எனக்கினி
வாழும் வரை உன்னுடன் ..!
Thas

அழகி

உன்னை பார்த்ததும்
என் உதடுகள்
சிரித்தது .
ஆனால் மலர்கள் அழுதது
தம்மை விட அழகி
இவள் யார் என்று..!

Thas