என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வியாழன், 28 ஜூன், 2012

தங்கை

சந்தோச சாரலில் ...
சிறுதுளி மழைத்தூறலாய் ...
புன்னகை சிறகினை தாங்கினோம்
நாளும் ...!
தடைகள் இன்றி வானில்
சிறகுகள் விரித்தோம் ..!

பிறந்தவள் நீ அல்ல ..'
பிரமன் தந்தவள் நீயானாய் .
விழிகள் தாங்கும் கருவில்
உன்னை சுமக்கும் அண்ணன்
நானாய் ...!
உன் விழிகள் கலங்கும் நாட்கள்
இல்லை உலகில் ...
தூரத்து உன் அழைப்பு ..
சுகமான கீதமாய் தென்றலில் ..'
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
தங்கை என்னும்
உறவே வார்த்தைகளாக இருக்கும் .!

By தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக