என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 1 ஜூன், 2012

வறுமை ...

வறுமை வறுமை ...
இதுவே உலகின் கொடுமை ...
கருவினில் இருந்தே ....
கடவுள் தந்த பரிசா எமக்கு ....
எத்தனை கனவுகள் பொய்யாக்கின ...
கஞ்சியே எங்கள் வீட்டின்
அடையாளம் .....
படிப்பதுக்கு நிலவு விளக்காக ....
புத்தகம் இன்றி
வெற்று காகிதங்கள்
கைகள் தந்தன ....
நரம்புகள் நாராய் தேய்ந்தாலும்
மனம் தளராத தந்தையின்
உழைப்பு மதியம் மட்டுமே ....
வயிற்றை நிரப்பியது...
கடவுள் இருந்தால் ....?
கண்கள் உண்டா அவருக்கு..
எங்களை காக்க அவரின் கரங்களும்
மறுக்குறதா ..... ?
நானும் சிறக்க ....
சிரிக்க ஆசை கொள்கிறேன்
முடியுமா..?
குறைகள் இன்றி பிறந்தாலும்
கருவே என்னை
கண்ணீருடன் தான் சுமந்ததா ..?
எங்கள் மரணத்தில் பூக்கள்
தூபுவர்களே ....
எங்கள் வாழ்வில் எங்களின் ...
கண்ணீரை துடைக்க வாருங்கள் ...!
நானும் நாளை ஒரு அப்துல் கலாம் ...
..அன்புடன் .....???????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக