என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

வெள்ளி, 1 ஜூன், 2012

எத்தனை நினைவுகள் ....!!!

எத்தனை நினைவுகள் ....
உணர்வுகள் எங்களின் வாழ்வினில் ....
பிரிவே உணராத உறவுகள் ...
நண்பர்கள் ... ! நாளை என்பதே மறந்து
நண்பர்கள் நாங்கள் சிட்டுக்களாய்
பறந்த அந்த உலகம் எங்கே ...?
காலை கதிரவன் வருவதற்கு முன்பே
தங்கள் மொழிகளில் இனிமையாய் ..
பேசி செல்லும் குருவிகளே
உங்களின் குரல் கேட்க தவிக்கின்றேன்
வருவீர்களா ...?
இனிதான இறைவன் பெயர்
சொல்லும் என் ஊரு கோவில் மணியே
இன்றும் ஒலிக்கிறாயா
...உன் குரல் கேட்க ஆசை .. ஆசை..?
பரிட்சைகாய் எழுதவும்
என்னவள் முகம் பார்க்கவும்
மட்டுமே உன்னிடம் வந்தேன்
மன்னிப்பாயா என்னை....?
வெள்ளிக்கிழமை நண்பர்கள் நாம்
உன் மடியில் உங்கார்ந்து உன்னையே
பேசினோமே எங்களை நினைவிருக்குரதஆ ..
ஆனாலும் ஓரமாய் நின்று
உன் பொங்கல் சாபிட்டோமே ...
எத்தனை பசுமையான நாட்கள் உன்னிடம்
இறைவா...
சிறகுகள் இல்லாமலே
மாலை நேரம் எங்களின் வீடாய்
வந்த எங்கள் மைதானமே உன்னை மறப்போமா
உசிர் உள்ளவரை ....
சின்ன சின்ன சண்டைகள் ...
சின்ன சின்ன கோபங்கள் ...

வானத்து நட்சத்திரமாய்
சுதந்திர நாயகர்களாய் வலம் வந்த என்
நண்பர்களே இன்றும்
உங்களின்.....
செல்ல சின்ன கோபங்கள் எங்கே ?
வாருங்கள் மீண்டும் புதிய பிறப்பு எடுப்போம் ...
காதல் ...
இது தானே எண்களின் மகிழ்ச்சி
உன்னவளை தேடி போன நாட்களின்
ஜாபகங்கள் இன்னும் என்னிடம் ..
அவளை காண எத்தனை தவிப்பு ...
தண்ணீர் குடத்துடன்
மெல்ல நடந்து
அவள் கண்கள் மட்டுமே பேசியதை
இன்னும் நினைவிருக்குறதா..
கோவில் தேரில் என்னவள் மட்டுமே
சாமியாய் ஆனாவே....
அதுவும் நினைவில் ....
அவளுக்காய் வாழ்ந்து
அவளும் இல்லை
நீங்களும் இல்லை ... என்னோடு ..
கனவுகள் மட்டுமே
உங்களை என்னிடம் தருகிறான
இப்போ எனது நண்பன் கனவுகள்
மட்டுமே......
நண்பர்களே மீண்டும் சொல்கிறான்
உங்கள் நண்பன்
எண்களின் கல்லறைகள் எண்டாலும்
தூரம் இன்றி அமையட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக