என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

சனி, 21 ஜூலை, 2012

நினைவுகள் ......!
தாலாட்டு சொல்லி என்னை
தூங்கவைத்த அன்னை அவள்
குரல் கேட்கும் காலமது எப்போ ...?
தோள் சுமந்து என்னை தாங்கிய
தந்தையவர் அரவணைப்பு எப்போ இனி ..?
தனிமையில் தனியாய் ஒருமையில் இங்கே !
வலியது பிரியுது மரணமும் மறுக்குது ..!

கூடி கோவில் திருவிழா கண்ட கூடி பிறந்தவர்
எங்கே ?
கை பிடித்து பள்ளிக்கு பக்குவமாய்
தெருவோரம் தெரியா கதை பல கூறி
புன்னகைகள் தந்த பாட்டி அவள் நினைவுகள்
இன்னும் ...!

மௌனம் கொண்டு விரதம் கண்டு
வட்டமிட்டு வாழை இல்லை போட்டு
சோருமிட்டு பருப்பும் போட்டு
அப்பாவின் வருகைக்காய் காத்திருந்த
சுகமான நாட்கள் இனி எப்போ ..?

தங்கைக்கு தாயான நாட்களும் ..
அக்காவுக்கு அண்ணனான பொழுதுகளும்
தம்பிக்கு தந்தையான நினைவுகளும்
கிடைக்காத வரமாக கழித்த நாட்களும்
வருமா என் வாழ்வில் ஏங்குகிறேன் ..!

நிலா முத்தத்தில் சித்தப்பாவும் சித்தியும்
நாங்களும் நாளும் தாயம் போட்டு
கண்ணீர்விட்ட , கைகள் தட்டிய
தணியாத ராகங்கள் இரவினில் இருளை
பகலாக்கிய சுகங்கள் இனி எப்போ..?

மைதானம் சேர்ந்து நண்பர்கள் கூடி
கைத்தாளம் போட்டு பாட்டு பல இசைத்த
நாட்களை மறப்பேனா ..?

பிரிவுகள் உன் படைப்பில் நிரந்தரம்
இறைவா .!
நினைவுகள் அதுபோல் என் வாழ்வில்
நிரந்தரம் ..!
இனி ஒரு பிறப்பு வேண்டாம் இதுபோல்
பிரிவுகள் தரும் வலிகளை சுமப்பதற்கு ..!

தாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக