என்னுள் உனக்காய் உயிராய் தூறலாய் வரைந்த என்னுயிரின் உணர்வுகள் ..Part-2!

திங்கள், 2 ஜூலை, 2012

இங்கிலாந்தில் மாணவர் விசாவில் தங்கி இருப்போரின் நிலை

பிறந்த மண்ணில் 
வியர்வை சிந்திய என் தந்தை
பணத்தில் ....!
சொந்த மண் பல்கலை பட்டம்
இருந்தும் ..... பயணம் தொடர்ந்தது 
படிப்பும் பணமும் அணைக்க ...!

முதல் முதல் பயணம் வானில்
பறக்கும் மனிதனாய் ...!
கால்கள் பதித்தது லண்டன் மண்ணில்
மனமும் மகிழ்ந்தது ......
அணைக்க உறவு இல்லை 
இருக்கும் பணத்தில் பசியை போக்கும் 
இல்லா மனிதன் உண்ணும் நாளாய் ..!
பல நாள் அலைச்சல் சிலகாசு வேலை 
அரைவாசி பயணத்திற்காய் கரைய ...
முழுமையும் இல்லாமல் போகும் 
இருக்கும் வாடகை வீடடுக்காய் ...!

சட்டங்கள் புதிது 
எங்கள் கனவுகள் கரைந்தது ...!
இருந்ந்தும் தெரியாது அம்மாவுக்கு ..
என் படிப்பு பாழாய் போனது ....!

வேலை இழந்தோம் ...
படிப்பை மறந்தோம் ....இருந்தும் இரை
தேடும் பறவையாய் தினம் தினம் அலைகின்றோம் 
பணத்துக்காய் வேலை தேடி ...!

கருவினில் சுமந்தவள் புன்னகை 
நிலைப்பதுக்காய் ...
களவாய்   உழைத்த பணத்தை 
அணைத்தது என் தாயவள் கைகள் ..!

கிடைத்த பணத்தில்
சாமிக்கு சங்காபிசேகம் ..! 
ஊருக்கு அன்னதானம் .
என் வலிகள் அறியா அவள் இதயம் .
புரியாத புதிராய் எனக்குள் ..!

விதியின் விளையாட்டு 
என் கைகள் சுமந்தது விலங்கு ...!
பிறந்த மண்ணும் அழைக்க வில்லை 
பெத்தவள் உதடும் அழைக்கவில்லை ..
இருந்தும் திரும்பினான் நாடு ...

இவன் விழிகள் சிந்திய கண்ணீர் துளிகள் 
நேரம் இருந்தால் ...
சேர்த்து பாருங்கள் ...
உலகில் உயிரே அறியாத வலிகளை 

அவன் கண்ணீர் துளிகள் சுமந்து இருக்கும் ..!

உழைத்த பணத்தில் சாமியும் 
மகிழ்ந்தது ...!
ஊரும் உண்டது ..
அவன் நினைவுகள் இழந்து 
தனிமையில் அங்கே  

இவனின் இந்த பயணம்
கல்லறை நோக்கியே ....


எழுதியவர் :-தாஸ் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக